சா (ஜா)தி.
சாதி தமிழர் பெற்ற சாபமா ? வரமா ?.
வள்ளுவம் காணாதது ஜாதி
வாழ்க்கை பயணத்தில் நாம் கண்டது ஜாதி
ஒவ்வை பேசிய ஜாதிக்கும்
பாரதி கண்ட ஜாதிக்கும்
இன்றைய நடைமுறை சாதிக்கும் நிறைய வேறுபாடு உண்டு
ஜாதி .
சாதி.
அன்று ஜாதி .
இன்று சாதி .
சாதி சாதிக்கும்
இன்றைய சாதி நிபுணத்துவம் நோக்கி நகர்கிறது .
இதை தமிழர் உணர வேண்டும்
அன்றைய சாதி வேறு
இன்றைய சாதி வேறு .
அன்றைய சாதி ஈனம் செய்யும்
இன்றைய சாதி இனம் காட்டும் .
அன்றைய சாதி உடல் சாதி .அவமதிக்கும் ....புறந்தள்ளும் .
இன்றைய சாதி துறை சாதி ... நிபுணத்துவம் ஆகும்.
இன்று, சாதி தமிழர் பெற்ற வரம் .... வரபிரசாதம் .
தோணி இயக்குவான் தொல்லை வருணத்து
காணிற் கடைப்பட்டான் என்று இகழான் - இது செய்யுள்
இவன் படகு ஓட்டுபவன் .இவன் கீழ் சாதி என்று ஆற்றை கடக்கும் அந்த நேரம் படகில் பயணம் செய்யும் எவரும் எண்ண மாட்டார் . படகு ஓட்டுபவனை ஆதாரமாகக் கொண்டு ஆற்றைக் கடந்து போவார் . அப்போது யார் கண்ணுக்கும் சாதி தெரியாது.
அன்று அவன் தோணியன் - கீழ் ஜாதி
இன்று அவன் போக்குவரத்து துறையன்..(TRANSPORT DEPARTMENT) .
வீட்டின் பிணம் விழும் . பிணம் வெட்டியான் எனும் கீழ் ஜாதிகாரன் ஆதிக்கத்தில் இருக்கும் .வெட்டியான் பிணத்தின் எஜமான் .
அன்று அவன் வெட்டியான்
இன்று அவன் ..( UNDERTAKER )
வீட்டின் மலக் கூடத்தின் தொட்டி / தோம்பு நிறைத்தவுடன் தோட்டியை அதாவது (சக்கிலியனை ) கூப்பிடுவர் . அப்பொழுது சக்கிலி எனும் தோட்டி எஜமான் ஆகி விடுவான். அவன் இல்லை எனில் மேல் சாதிகாரன் பாடு அதோ கதிதான்
அன்று அவன் ( தோட்டி ) சக்கிலியன்
இன்று அவன் ..(INDAHWATER)
அன்று முடி சிரைப்பவன் பரியாரி
இன்று அவன் ..(SALOON) சிகையலன்காரி
அன்று சமையல்காரன் கீழ்ஜாதி
இன்று அவன் ..(CHEF) . வெளியுலக உணவு முழுதும் அவனது ஆதிக்கம் .
அன்று சட்டி, முட்டி, சாமான் செய்பவன் குசவன் .
இன்று அவன் சிறுதொழில்காரன் ..( INDUSTRY )
அன்று பள்ளத்தில் விழுந்து கிடந்தவன் பள்ளன் . பள்ளமான நீர் தேக்க இடத்தின் விவசாயி அவன் . அதன் நுட்பம் நுணுக்கம் தெரிந்தவன் .
அன்று அவன் பள்ளர்
இன்று அவன் ..(AGRICULTURE)
அன்று தென்னை, பனை பாக்கு இறக்கியவன் சாணான் ( நாடார் )
இன்று அவன் வர்த்தகன் /வியாபாரி.
அன்று பறை சாற்றியவன் பறையன்
இன்று அவன் தொடர்பு துறையாளன் ..(COMMUNICATION SECTOR)
அன்று பணத்தோடு புரண்டவன் பணக்காரன் ஆனான்
- முதல் போட்டவன் முதலி
- கட்டு செட்டா கணக்கு போட்டவன் செட்டி
அதனால் அவன் மேல்ஜாதி
படைத்தொழில்.... போர்த்தொழில் செயல் இழந்தபின் பிழைக்க வழி இல்லாமல்
இருந்தனர் ஒரு பிரிவினர். உடல் பலத்தால் திருட்டும், கள்ளமும் புரிந்து கள்ளர் ஆகினர். உடல் பலமும், தைரியமும், வீரமும், பராக்கிரமமும், நிலை தாழ்ந்தபோதும் அடாவடியாலும் , குண்டர்த்தனதாலும் மேல்ஜாதிகாரனாக தாங்களே தங்களை உருவாக்கிக் கொண்டனர். இன்று அவர்கள் இந்த மண்ணில் நிர்வாகிகள் ;..(MANAGEMENT) . தங்களை தேவர் என்கின்றனர். மாரியம்மன் தேவஸ்தானம்
டத்தோ ஸ்ரீ சாமிவேலு - எத்தனையோ பேர் தேவர்கள் ; ஆளுமை செய்கிறார்கள்.
ஆடு, மாடு வளர்த்தவர். இடையர் குலம் - கீழ்ஜாதி.
பிறகு, அவர் பால் வியாபாரி ஆகியதால் கோனார்/ யாதவர் ஆனார் . கண்ணன் எனும் கடவுள் அந்த சாதியில் வளர்ந்தார் . அதனாலும் அவர் மேல்சாதியாகி விட்டார்.
இவர் இன்று மேல்ஜாதி
ஆதியில் பிராமணர்கள் மேல்ஜாதி, அரசர்கள் மேல்ஜாதி .
இடையில் கள்ளர் , முதலி , செட்டி, கோனார்,வன்னியர், கொங்கன் ,
இப்படியாக மேல்ஜாதி .
இன்றோ பல்லி கவுண்டர், நாடார், பள்ளர் , மேல்ஜாதி ஆகி கொண்டிருக்கின்றனர். பறையர், பாணன், சாணன், சக்கிலி, எல்லாம் வரிசை பிடித்து மேல்ஜாதியாக ஆகி கொண்டிருக்கின்றனர் .
நாளை யாரும் கீழ்ஜாதியற்றவர்.
அவர் அவரும் புதுபெயரும், தோற்றமும் பெறுவர்.
கள்ளர் எனும் தேவர் குலம், பள்ளர் எனும் தேவேந்திர குளம், சோலி வெள்ளாளன், பிள்ளை, இப்படியாக புதுபெயரும் , தோற்றமும் வந்து கொண்டே இருக்கும் .
இதுவே தீர்ப்பு .
பணம் உள்ளவர் எல்லாம் ; பணம் படைத்தவர் எல்லாம்
இனி கீழ்சாதியாகார் ; எல்லாரும் மேல்ஜாதி .
கோடிஸ்வர ஆனந்தகிருஷ்ணன் வீட்டில் பிராமணன் சம்மந்தம் செய்வான்.
இளையராஜா, எ. ஆர். ரஹ்மான், விஜய், விஜயகாந்த் , எல்லாருமே இனி மேல்ஜாதிதான்.
இம்மண்ணில் சாதி - எம் .ஜி .பண்டிதன் அரசியல் போர் தொடுத்த போதே
கதிகலங்கி விட்டது. அன்று தொட்டு அது சாதிக்க தொடங்கி விட்டது.
இன்னும் பத்து ஆண்டுகளில் புது புது முலாம் பூசி பளிச்சென்று ஆகி விடும் .
இப்படியாக இன்று எல்லாரும் மேல்ஜாதியாக மாறிகொண்டிருக்கையில் இன்று
இன்னும் இழிநிலை . இம்மண்ணில் தமிழர் இழிநிலையில் உள்ளதை நம்மால் உணர
முடிகிறதே !!
அது என்ன வகை இழிவுநிலை....!!
அதை சிந்திக்க வேண்டும் .
நிலைகெட்ட மனிதர்- தமிழர்
நெஞ்சு பொறுக்குதில்லை நிலைகெட்ட மனிதர் இவர் ....
என்றான் பாரதி .
ஆம்! தமிழர் நிலை கெட்டவர்
தன்னிலை மறந்தவர் .
உன்னையே நீ அறி என்று
இவர்களை பார்த்து கண்டிப்பாக
சொல்ல வேண்டும்
சாதியில் உயர்நதிருந்தாலும் தமிழன் தன்னிலை மறக்கிறான்.
டத்தோ ஸ்ரீ சாமிவேலு , ஆனந்தகிருஷ்ணன் , பெரும் பணக்காரர்கள் பலர் யாராயிருந்தாலும் தமிழர்களாக இருந்தால் தன்னிலை மறக்கின்றனர். ஏழையாக இருந்தாலும் தமிழர் தன்னிலை மறக்கின்றனர் .
உன்னையே நீ அறி என்று நாம் சொல்ல நேரும் போது தன்னிலை மறந்த தமிழர்களே முன் நிற்பர் .
தன்னிலை மறந்த தமிழரைதான் பாரதி நிலைகெட்ட மனிதன் என்றான். நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டல் .....
நெஞ்சு பொறுக்குதிலை என்றான்.
பாரதி கண்ட அந்த நிலைகெட்ட மனிதரை யார்?
அவர் எப்படி இருப்பார் ?
என்ன செய்வார் ?
ANBU, AMAITHI, ANNATHAANAM, THIYAANAM, THARMAM ...
ITHUVE ULAGA MAKKAL ONDRU SEERA ORE VAZHI